டெல்லி குண்டு வெடிப்பு - வெளியான பரபரப்பு தகவல்

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காததால் அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்

டெல்லி குண்டு வெடிப்பு - வெளியான பரபரப்பு தகவல்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் பள்ளி அருகே நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாலத்தீன் பையில் சுற்றி, ஒன்றரை அடி ஆழமுள்ள குழியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகத்திற்குரிய நபரை சிசிடிவி மூலம் தேடும் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை காலம் என்பதால் டெல்லியில் ஏற்கனவே உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு தற்போது பாதுகாப்பை மேலும் அதிகரித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காததால் அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரிமாறி கொண்டார்களா என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow