மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - தவெக இடையே மோதல்..நாகையில் உச்சக்கட்ட பரபரப்பு..
நாகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வெற்றி கழகம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நாகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வெற்றி கழகம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெருகடம்பனூர், கீழ்வேளூர், ஓர்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று கொடியேற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே கொடியேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி தமிழக வெற்றிக்கழக கொடியினை வேறு இடத்தில் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட த.வெ.க.வினர் அருகில் வேறு இடத்தை தேர்வு செய்து புதிய கொடிகம்பம் நட்டு வைத்தனர்.
இந்த நிலையில் தவெக நிர்வாகியும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மாரிமுத்து இருக்கக்கூடிய தெருவில் அதே பகுதியில் இளங்கோவன், துரை உள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் தாக்கியதில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் தவெக விவசாய அணி நிர்வாகியுமான மாரிமுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று த.வெ.க.வினர் தாக்கியதில் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ மற்றும் துரை ஆகிய இருவரும் காயங்களுடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜாவுடைய இருசக்கர வாகனம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தவெக மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் மாற்று இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக்கழக கொடியினை ஏற்றி வைத்தார். இந்த பிரச்சனை தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?