போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..பேச்சுவார்த்தைக்கு இறங்கிய அமைச்சர்
சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.
சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், சாம்சங் நிறுவனத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, சாம்சங் நிறுவன மேலாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றதாகவும், அதில், நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கப் பயனுள்ள உரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாம்சங் நிர்வாகத்தினரும் அவர்களின் ஊழியர்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியுடன் நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?