தங்கம் விலை.. இன்று கொஞ்சம் ரிலாக்ஸ்.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்றைய தினம் சற்றே குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்து 52,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் இந்திய பெண்களின் முதலீடுகளில் முக்கியமானது. திருமணத்தின் போது மகள்களுக்கு சீதனம் தருவதற்காகவே தங்கத்தை வாங்கி சேகரிப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சவரன் தங்கம் ரூ.5000 விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.6500ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது. ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகை விலை உயர்வினால் நடுத்தர மக்களும், நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே உயரே பறந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் குறையத் தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்ரல் 04) சவரன் ரூ.52,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஏப்ரல் 5ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.52,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.6510க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து கிராம் 85க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து ரூ.85,000க்கு விற்பனையாகிறது.
What's Your Reaction?






