கவரைப்பேட்டையில் ரயில் விபத்து: 36மணி நேரத்திற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?

ரயில் விபத்து நிகழ்ந்த கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்திற்கு பிறகு இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தொடங்கியது.

Oct 13, 2024 - 11:23
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து: 36மணி நேரத்திற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?

ரயில் விபத்து நிகழ்ந்த கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்திற்கு பிறகு இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி தடம் புரண்ட பெட்டிகளை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

தண்டவாள சீரமைப்பு பணிகள் மற்றும் மின்சார ஒயர் சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று இரவு 9 மணிக்கு சென்னை நோக்கி முதல் ரயில் சென்றது. இதனைத் தொடர்ந்து சென்னை மார்க்கத்தில் அடுத்தடுத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக விபத்து நடைபெற்ற பகுதியை ரயில்கள் கடக்கும் சமயத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் என்ற அடிப்படையில் வேகத்தை குறைத்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில் கவரைப்பேட்டையில் விபத்து நடைபெற்ற பகுதியை கடந்து சென்றது.

இதைதொடர்ந்து மற்றொரு ரயில் தண்டவாளத்திலும் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து இரு மார்க்கத்திலும் ரயில்சேவை தொடங்கியது. முதற்கட்டமாக ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், அடுத்ததாக ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்து ரயில்கள் இயக்கப்பட்டன.

லூப் லைனில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் அதிலும் ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow