"முன்ன பின்ன பேப்பர் படிச்சா தான"....உதய் VS விஜய் !
இன்று சட்டபேரவையின் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் இடையே காரசாரம் விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நிதிநிலை அறிக்கை நேற்று முன்தினம் (ஆகஸ்டு 5) தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (ஆகஸ்டு 6) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளிப்பார்கள்.
அதைப்போலவே, சட்டப்பேரவை தொடங்கப்பட்ட நிலையில், 'மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு அமைந்த பிறகு இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்?' என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கான விவாதத்தை தொடங்கினார்.
மேலும், கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது. இதற்காகத்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்? எனவும், மேகதாது அணை குறித்து விவாதிக்க தவெக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். குறுவை சாகுபடி விவாசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.” என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு, பதிலளித்த முதலமைச்சர் விஜய் " காவிரி நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை. மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கோரிக்கை வைத்தது நான்தான்.
பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமருக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் சேர்ந்ததுதான் தீர்மானம் நிறைவேற்றினோம். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலுக்குபின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன். கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோது 1969-ல் இதே பேரவையில் விவாதங்கள் நடந்தன.
காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கோரிக்கை வைத்தது நான்தான். காவிரி விவகாரத்தை தீர்ப்பதற்கான ஒரே எண்ணத்துக்காகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சருடன் பேசி பார்ப்போமே என நினைத்துதான் முடிவெடுத்தேன்.பகை நாடுகளே பேசி தீர்க்கின்றன. பக்கத்து மாநிலத்துடன் பேசி பார்க்கலாம் என்றுதான் நினைத்தேன். பெங்களூரு சென்று அவமானம் நடந்தால் என்னாகும் என கேட்டார்கள். மக்களுக்காக அதையும் தாங்க நான் தயார்" என்றும் அவர் பதிலளித்தார்.
இதற்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ""குறுவைச் சிறப்புத் தொகுப்பு வழக்கமானது; விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரணம். பேப்பர் படிப்பதை விட, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்டால்தான் உண்மையான நிலைமை தெரியும்" என் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு வலியுறுத்தினார்.
What's Your Reaction?

