சட்டசபைக்கு அடுத்த இலக்கு உள்ளாட்சி... களமிறங்கும் த.வெ.க., தீவிரமாகும் அரசியல்!
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்ற தகவலால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற த.வெ.க. நம்பிக்கை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிக்கொண்டிருந்த ஆட்சிக் கட்டிலின் கால்களுக்கு அரக்கப் பரக்க முட்டுக்கொடுத்து, முதல்வர் விஜய் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், உள்ளாட்சி அமைப்புகளோடு மல்லுக்கட்டும் நிலை த.வெ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே, 'வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் த.வெ.க.தான் வெல்லும்' என்று பேசி எதிர்க்கட்சியினரை கிலியடைய செய்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படப் போவதாகவும், அவற்றை கைப்பற்ற த.வெ.க குறிவைப்பதாகவும் பேச்சுக்கள் எழவே சூடாகியிருக்கிறது அரசியல் களம் இதுகுறித்து மூத்தப் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசினோம்.
"உள்ளாட்சி அமைப்புகள், மாநில நிர்வாகம், மத்திய நிர்வாகம் என இந்தியாவில் மூன்று அடுக்குகளாக நிர்வாக அமைப்பு உள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊரகம். நகர்ப்புறம் என இரு வகை உண்டு. தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவானதினால் 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் 2019லும், எஞ்சிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு 2021லும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 2022ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
2019ல் தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் 2025 ஜனவரியுடன் ஐந்தாண்டுகால பதவிக்காலம் முடிந்துவிட்டது. இங்கு ஸ்பெஷல் ஆபிஸர்ஸ் மேற்பார்வையில் நிர்வாகம் நடக்கிறது. அதேபோல, 2021ல் தேர்தல் நடந்த இடங்களுக்கு அக்டோபர் 2026லும், 2022ல் தேர்தல் நடந்த நகர்ப்புறத்திற்கு பிப்ரவரி 2027லும்தான் பதவிக்காலம் முடிகிறது. இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, தமிழக உள்ளாட்சிகளுக்கு ஒரேடியாக தேர்தல் நடத்தப்போவதாக பேச்சுக்கள் எழுந்தன.
உடனே, பதவிக்காலம் முடியாத பிரதிநிதிகள் நீதிமன்றங்கள் வரை போர்க்கொடி தூக்கியது ஒருபுறம் என்றால், வார்டு மறுவரையறை இட ஒதுக்கீட்டுப் பணி உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைத்தது மாநிலத் தேர்தல் ஆணையம் இப்போது சட்டமன்றத் தேர்தலும் நடந்து, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்டதால் உள்ளாட்சியை மையப்படுத்தி தமிழக அரசியல் களமே வேறுமாதிரி பரபரக்கிறது. இதுவரை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அதிகாரத்தில் தி.மு.க., அதி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான் இருந்துவருகிறார்கள். ஒரு சில பதவிகள் வி.சி.க. காங்கிரஸ் உள்ளிட்ட இதரக் கட்சிகள் வசம் உள்ளன.
மத்திய, மாநில அரசின் திட்டங்களை சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்து முழுமைப்பெற வைப்பதற்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவசியமானது. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க. அ.தி.மு.க வசமுள்ள உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாறாக, உள்ளாட்சிப் பிரதிநி திகளுடன் பனிப்போரும். மோதலும், சலசலப்புகளும்தான் மேலோங்கி இருக்கிறது.
2026 ஆண்டு முழுவதுமே தேர்தல் திருவிழாதானா?
What's Your Reaction?