என்னது.... உதய்க்கு ஜாமின் கிடைக்காதா? எந்தெந்த பிரிவின் கீழ் வழக்கு ?
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேகதாது அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சரை ஆபாசமாகவும் எதிராகவும் பேசியதாக கூறி தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உதயநிதி ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள்,
BNS பிரிவு 196 – மதம், இனம், மொழி, சாதி, பிறப்பிடம் போன்ற அடிப்படைகளில் வெறுப்பு அல்லது பகையைத் தூண்டும் செயல்கள்/பேச்சுகள்.
BNS பிரிவு 192 – கலவரம் அல்லது பொதுஅமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல் அல்லது ஆத்திரமூட்டும் செயல்.
BNS பிரிவு 352 – வேண்டுமென்றே அவமதித்து, அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் தூண்டுதல்.
BNS பிரிவு 79 – பெண்ணின் மரியாதையை இழிவுபடுத்தும் நோக்கில் சொல், சைகை அல்லது செயல் (outraging the modesty of a woman).
BNS பிரிவு 296(b) – ஆபாசமான அல்லது அநாகரிகமான சொற்கள்/செயல்கள் மூலம் பொதுமக்களுக்கு தொல்லை அல்லது ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்துதல்.
BNS பிரிவு 61 – குற்றத்தைச் செய்ய பலர் இணைந்து செயல்பட்டால் (common intention), அனைவருக்கும் பொறுப்பு.
BNS பிரிவு 351(2) – குற்றமிரட்டல் (Criminal intimidation), கடுமையான மிரட்டல் அல்லது அச்சுறுத்தல்.
தமிழ்நாடு பெண்கள் தொல்லைத் தடுப்புச் சட்டம் (TNPHW Act), பிரிவு 4
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, அவமதிப்பு அல்லது மரியாதைக்கேடு ஏற்படுத்தும் செயல்களுக்கு தண்டனை வழங்கும் பிரிவு.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), பிரிவு 67
மின்னணு ஊடகங்களில் ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான தகவல்களை வெளியிடுதல் அல்லது பரப்புதல் தொடர்பான குற்றம்.
இந்தப் பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் (Cr. No. 287/2026) வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?

