அரியானாவில் ராகுலுக்கு மக்கள் அல்வா கொடுத்துட்டாங்க...தமிழிசை கிண்டல்

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஜிலேபி கொடுத்து இது ராகுல் ஜிலேபி என்று கொண்டாடினார்கள்,  அதற்கு மக்கள் அல்வா கொடுத்து விட்டார்கள்

Oct 8, 2024 - 21:12
அரியானாவில் ராகுலுக்கு மக்கள் அல்வா கொடுத்துட்டாங்க...தமிழிசை கிண்டல்

அரியானா மக்கள் ராகுல் காந்திக்கு அல்வா கொடுத்துவிட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை  முன்னிட்டு பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தமிழிசை சௌந்தரராஜன், துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

 இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,  “இரண்டு மாநிலங்களில் வெற்றி என்னவென்று பார்த்தால் அரியானா என்பது முதல் வெற்றி ஜம்மு காஷ்மீரில் கூட நாங்கள் வெற்றி தான் பெற்றுள்ளோம். எப்படி வெற்றி பெற்றுள்ளோம் என்பதை பார்த்தால் தேர்தல் வெற்றியை விட அந்த பகுதியில் தேர்தல் நடத்தியதே வெற்றி தான். ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் தேர்தல் நடத்தும் வாய்ப்பை பா.ஜ.க. பெற்றுள்ளது. 

370 என்ற சட்டப்பிரிவை நீக்கி பின்பு வரும் முதல் தேர்தல் இது, தீவிரவாதத்தை ஒழிக்கப்பட்டு மக்கள் அதிக எண்ணிக்கையோடு வாக்களித்த தேர்தல் ஆக இது காணப்படுகிறது. தேசிய கட்சியாக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி 7 தொகுதியை மட்டும் பெற்றுள்ளது. அவருடைய கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று வருகின்ற நிலையில் காங்கிரஸ் தற்போது இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரியானாவில் காங்கிரசுக்கு அந்த வெற்றியை கொடுக்க அந்த மக்களுக்கு மனமில்லை. மக்கள் காங்கிரஸ் கட்சியை சுருக்கி இருக்கிறார்கள். 26 முதல் 27 இடங்களை பெற்று பா.ஜ.க. பலமாக கடைசியாக வளர்ந்துள்ளது. இந்த முடிவுகள் மூலம் கருத்துக்கணிப்புகள் பொய்யாக்கப்பட்டுள்ளது. மேலும், கருத்துக்கணிப்புகளை வைத்து காங்கிரஸ் வெற்றி பெற்றது போலவே ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஜிலேபி கொடுத்து இது ராகுல் ஜிலேபி என்று கொண்டாடினார்கள்,  அதற்கு மக்கள் அல்வா கொடுத்து விட்டார்கள். யார் முதலாவது வருவதை பார்க்காமல் யார் முதல்வராக வருவதை குறித்து காங்கிரசினர் தொடர்ந்து யோசனை மேற்கொண்டு இருக்கிறார்கள். 

காங்கிரசார் ஒரு மிதப்பில் இருந்தார்கள் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று, இந்த வெற்றினை பிரதமருக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அந்த மாநிலத்திற்கு சரியான தேர்தல் முறையில் வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். அரியானா மக்களுக்கு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 

அரியானா மாநிலத்தில் மட்டும் மூன்றாவது முறையாக ஹட்ரிக் அடித்துள்ளோம், 2009 ஆண்டு அரியானாவில் பாஜக எம்.எல்.ஏக்கள் பெற்ற சீட்டு 4, அப்படிப்பட்ட மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை வெற்றியை பெற்றுள்ளோம். தமிழகத்தில் கூட பாஜக பலம் பொருந்திய கட்சியாக வர வாய்ப்புள்ளது. மேலும் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தவே அதிமுகவில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். தளவாய் சுந்தரம் பா.ஜ.க.வுக்கு வரலாம் என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow