அடல்ட் சமாசாரங்கள் நிறைந்த வனிதாவின் Mrs & Mr திரைப்படம்: சினிமா விமர்சனம்
சமூக வலைதளத்தில் ஏதோ ஒரு வகையில் பேசுப்பொருளாகவே இருக்கும் வனிதா விஜயகுமாரின் இயக்கத்தில் திரையில் வெளியாகியிருக்கும் Mrs & Mr திரைப்படம் குறித்த குமுதம் விமர்சனம்.

டார்க் ஹ்யூமர் படத்தில் அடல்ட் கன்டென்ட் சமாசாரங்களை அருவருப்பு இல்லாமல், நகைச்சுவையாக, புத்திசாலித்தனமாக சொல்வதில் வல்லவர், கமல். இப்போது அந்த லிஸ்டில் தன்னையும் இணைத்திருக்கிறார் இயக்குநர் வனிதா விஜயகுமார்.
40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் குண்டான மனைவி.. இனி குழந்தையே வேண்டாம், மனைவியே குழந்தையாக இருந்தால் போதும் என்று நினைக்கும் 45 வயது குண்டு புருஷன். இதில் யார் ஆசை, எப்படி நிறைவேறியது? என்பதுதான் கதை.
செக்ஸ், சென்டிமென்ட், காமெடி, எமோஷன் என சகலத்துக்கும் தீனிபோடும் சத்தான திரைக்கதை. ஜி.வி.எம். மாதிரி ஸ்டைலிஷான மேக்கிங். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் வேற லெவல். ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, ராஜாவின் ஒரிஜினல் சாங் என பட்டயக் கிளப்பும் சமாசாரங்கள் ஏராளம்.
தன்னுடைய வயது, உடம்புக்குப் பொருத்தமான ஒரு கேரக்டரை உருவாக்கி, அதில் தானே நடித்து, இயக்கி, அசத்தியிருக்கிறார், வனிதா விஜயகுமார்.
அவரது கணவராக வரும் ராபர்ட் நிஜ வாழ்க்கைத் துணை என்பதால், கெமிஸ்ட்ரி பிரமாதம். ஷகிலா, கும்தாஜ், பாத்திமா பாபு, கிரண், ஆர்த்தி என நடித்திருக்கும். எல்லாருமே எக்ஸ்ட்ரா லார்ஜ்.
வசனங்கள் வாழ்க்கையின் நிஜம். அந்த பிரா, பிரஸ்ட் சமா சாரங்கள்.. புருஷனுக்கு ப்ளோ ஜாப்.. என்பதெல்லாம் அதீதமான கற்பனை. அதை வக்கிரமில்லாமல் எடுத்திருப்பது இயக்குநர் வனிதாவின் கிரியேட்டிவிட்டி.
ஸ்ரீமன், பவர் ஸ்டார், அனுமோகன் காமெடி இழுவை. சென்டிமென்டுக்காக கதையை சித்தூருக்கு இழுக்காமல், பாங்காக்கிலேயே படத்தை முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
What's Your Reaction?






