எங்கே ஜாபர் சாதிக்?.. தேடும் போலீசார்.. வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்..

டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் ஒட்டியுள்ளனர்.

Feb 26, 2024 - 14:02
எங்கே ஜாபர் சாதிக்?.. தேடும் போலீசார்.. வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்..

போதைபொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டு, தற்போது தலைமறைவாக இருக்கும் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வீட்டின் முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில், போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுக்கு பின்னணியில் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருப்பது விசாரணையில் அம்பலானது. சுமார் ரூ.2,000 கோடி வரை கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த விவகாரம் கோலிவுட்டில் பக்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அண்ணா அறிவாலயத்தையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதனால் அவர் கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. 

கடத்தல் சம்பவத்தில் தம்மை போலீஸ் தேடுவதால் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கியது முதல் ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜாராக கூறப்பட்டு இருந்த நிலையில் இன்று (பிப்.26) ஆஜராகாத காரணத்தால் தற்போது மைலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் ஒட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow