Akkaran: “படு வில்லங்கமான கதை..” அக்கரன் குறித்து மனம் திறந்த MS பாஸ்கர்!
அக்கரன் திரைப்படம் குறித்து அதில் லீடிங் கேரக்டரில் நடித்துள்ள எம்.எஸ் பாஸ்கர் மனம் திறந்துள்ளார்.
சென்னை: பல படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளவர் எம்.எஸ் பாஸ்கர். அவர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது அக்கரன். இதில் ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக ஆக்சன் காட்சிகளை எடுத்தார். அதுவும் நன்றாக வந்துள்ளது. என் அக்கா மகன் மது, ‘‘என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யணும்’’ என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது.”
”இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். எல்லோருடைய முயற்சியால் மிக அழகாக இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகி விடுவேன், வெண்பாவும் பிரியதர்ஷினியும் என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அதுபோல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது. படத்தை குன்றம் புர டக் ஷன்ஸ் தயாரித்துள்ளது’’ என்றார்.
இயக்குநர் அருண் K பிரசாத் பேசியதாவது, எம்எஸ் பாஸ்கர் அழுத்தமாக அருமையாக நடித்துள்ளார், இந்த கதை புதுமையாக இருக்கும்.’என்றார்.
What's Your Reaction?