அனைத்து மொழிகளிலும் பிரதமரின் உரை...சாத்தியமாக்கிய ஏஐ தொழில் நுட்பம்!
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பிரதமர் மோடியின் உரைகள் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்வாக்கு உள்ள தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியமானவராக உள்ளார். இந்தி பேசும் மக்களிடையே அவரது உரைகள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படும் நிலையில், மற்ற மொழி மக்களிடையே சென்று சேரவில்லை. இதனைப் போக்கும் விதமாக சில தன்னார்வலர்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அவரது உரைகளை மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் இந்த உரைகளுக்கு என தனித்தனியே எக்ஸ் தளப் பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் பிரதமரின் உரைகள் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை தமிழ் பக்கத்தை அவர் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் 'சில தன்னார்வலர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எனது உரைகளை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர். இது தமிழில் எனது உரையின் சிறிய பகுதி. இந்த மொழியில் எனது பிற உரைகளைக் காண இந்த பக்கத்தைப் பின்தொடருங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?