தோனி என்னை நம்பினார்; தொடர் நாயகனாக ஆனேன் - பழைய நினைவுகளை பகிர்ந்த அஸ்வின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்டோரியா அணிக்கு எதிராக விளையாடிய போது, ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிந்தது.

Jun 22, 2024 - 20:33
தோனி என்னை நம்பினார்; தொடர் நாயகனாக ஆனேன் - பழைய நினைவுகளை பகிர்ந்த அஸ்வின்

மகேந்திர சிங் தோனி என் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, சாம்பியன் லீக் தொடரில், தொடர் நாயகன் விருதினைப் பெற்றேன் என்று சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பத்திரிக்கையாளர் சித்தார்த் எழுதிய இந்த புத்தகத்தை தனியார் நட்சத்திர விடுதியில் அஸ்வினே வெளியிட்டார். இந்த புத்தகத்தை நான்கு ஆண்டுகள் முயற்சிக்கு பின் எழுதி முடிந்ததாக கூறினார்.

அஸ்வினின் சுயசரிதை புத்தகமாக இல்லாமல் அவருடைய கிரிக்கெட் தொடர்பான அனுபவங்களை குட்டி ஸ்டோரியாக இதில் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் சிறு வயதில், காசநோய் பாதிப்பு காரணமாக, தன்னால் உணவு உண்ண முடியாமலும், நீர் அருந்த முடியாமலும் தவித்ததையும், அப்படியே அருந்தினால், வாந்தி எடுத்ததையும், ஓடினால் இருமல் வந்ததையும், ஆனாலும் தான் தொடர்ந்து விளையாடியதையும் அஸ்வின் விளக்கி உள்ளார்.

இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார். புத்தகத்தை வெளியிட்டு பேசிய அஸ்வின், இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கிரிக்கெட் விளையாட்டில் மெட்ராஸ், தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவிலிருந்தே தனியாகவே இருக்கிறது. இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், 2010ஆம் ஆண்டு சாம்பியன் லீக் தொடரில் நடைபெற்ற சுவராஸ்யாமன விஷயங்களை பகிர்ந்தார். இது குறித்து கூறியுள்ள அஸ்வின், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்டோரியா அணிக்கு எதிராக விளையாடிய போது, ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிந்தது. அப்போது, பந்துவீசுவதற்காக எனது கையை உயர்த்தினேன். ஆனால், அந்த ஓவரில் 22 ரன்களை வழங்கினேன். மேலும், அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினோம்.

அப்போது தோனி என்னிடம் கூறிய விஷயம் ஒன்றுதான். நீங்கள் மாறுபட்ட பந்துவீச்சு திறன் உள்ளது. அதற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டியது அவசியம் என்றார். அதேபோல், அடுத்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், முடிவில் தொடர் நாயகன் விருதினையும் பெற்றேன்” என்று நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow