Aus vs Ind: ஐசிசி தொடர்களில் யார் கை ஓங்கியுள்ளது? முடிவுக்கு வருகிறதா ரோகித் தலைமை?

தோல்வியடையும் பட்சத்தில் தொடரிலிருந்து வெளியேறும். அவ்வாறு தோல்வியடையும் பட்சத்தில் ரோகித் மற்றும் விராட் கோலி பங்கேற்கும் இறுதி ஒருநாள் போட்டியாக இது இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

Mar 4, 2025 - 10:03
Aus vs Ind: ஐசிசி தொடர்களில் யார் கை ஓங்கியுள்ளது? முடிவுக்கு வருகிறதா ரோகித் தலைமை?
Ind vs Aus - champions trophy

மார்ச் 4 ஆம் தேதியான இன்று துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் ஐசிசி தொடர்களின் ஜாம்பாவனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா மோத உள்ளது. ஐசிசித் தொடர்களில் இரு அணிகளும் மோதிய போட்டிகளில் யார் கை இதுவரை ஓங்கியுள்ளது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைப்பெற்று வருகிறது. குரூப் பிரிவில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என மூன்று அணிகளையும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. அரையிறுதிப் போட்டிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தேர்வாகிய நிலையில், இன்று நடைப்பெறும் முதல் அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவினை எதிர்க்கொள்கிறது இந்திய அணி.

உலகக்கோப்பையில் யார் ஆதிக்கம்?

ஐசிசி தொடர்களினைப் பொறுத்த வரை இந்தியாவும், ஆஸ்திரேலியா அணியும் தங்களது பலத்தை ஒவ்வொரு முறையும் நிரூபித்துள்ளனர். 50-ஓவர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் தலா 14 முறை மோதியுள்ள நிலையில் 5 முறை மட்டுமே இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது. 

உலகக்கோப்பை போட்டியில் முதன்முறையாக 1983 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாமில் நடைப்பெற்ற போட்டியில் முதன் முறையாக மோதின. அதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 320/9 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இந்தியா வெறும் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதியாக 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. அதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிராவிஸ் ஹெட் 137(120) ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் இலக்கை அடைந்து கோப்பையினை வென்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நிலைகுலையச் செய்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரினைப் பொறுத்தவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நான்கு முறை மட்டுமே மோதியுள்ளன. அதில் 2 முறை இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. ஒரு முறை எவ்வித முடிவும் இன்றி போட்டி கைவிடப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் பதிப்பின் காலிறுதியில் முதல் முறையாக இரு அணிகளும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய  அணி  307/8 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக தொடக்க வீரர் சச்சின் டெடுல்கர் 141 ரன்களும், அஜய் ஜடேஜா 71 ரன்களும் எடுத்தனர். இலக்கை விரட்டி ஆடிய ஆஸ்திரேலியா அணியில் மார்க் வா 74 ரன்கள் குவித்த போதும் மறுமுனையில் யாரும் ஈடுகொடுக்காத காரணத்தினால் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இறுதியாக 2009 ஆம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை:

மாடர்ன் கிரிக்கெட் தொடர் என்றழைக்கப்படும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 6 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா அணி 4 முறை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடர்: 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2023 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. ஒட்டுமொத்தமாக ஐசிசி தொடர்களில் நாக்-அவுட் போட்டிகளில் 8 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 முறை வெற்றிப்பெற்றுள்ளது.

இன்று நடைப்பெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் பட்சத்தில் தொடரிலிருந்து வெளியேறும். அவ்வாறு தோல்வியடையும் பட்சத்தில் ரோகித் மற்றும் விராட் கோலி பங்கேற்கும் இறுதி ஒருநாள் போட்டியாக இது இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

Read more:

xiaomi 15 ultra: புதிய போன் மாடலுக்கு இந்தியாவில் என்ன விலை? அப்படி என்ன வசதி இருக்கு?

World Wildlife Day: நிதி இல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு எப்படி சாத்தியம்?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow