தவெக மாநாட்டிற்கு விழுப்புரம் போலீஸ் வைத்த செக்- அதிர்ச்சியில் விஜய்
மாநாடு ஏற்பாடுகள், கட்சியின் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து விஜய் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்
தவெக மாநாட்டில் விழுப்புரம் காவல் துறையின் மூலம் கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மாநாடு நடத்துவதற்குக் காவல் துறை சார்பில் அனுமதி பாதுகாப்பு வழங்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சி நிர்வாகிகள் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் கடந்த 21ஆம் தேதி ஏ டி எஸ்பி திருமாலிடம் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான பரிசீலனை செய்த காவல் துறை ஏற்கனவே மாநாடு நடத்த 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததில் சில தளர்வுகள் அளிக்கவேண்டுமென கேட்டிருந்தனர்.அதன்படி மாநாடு அக்.27ஆம் தேதி நடத்துவதற்கு விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.
அனுமதி அளிக்கப்பட்டதில் கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மாநாடு நடைபெறும் நாள் அன்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் சாலைகளின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தக்கூடாது, கட்டாயம் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்குத் தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள், மருத்துவ வசதியுடன் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மாநாட்டுத் திடலில் நிறுத்த வேண்டும், குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும், பேனர், வளைவுகள் தேசிய நெடுஞ் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கக் கூடாது, முக்கிய தலைவர் விஜய் மாநாட்டிற்கு வரக்கூடிய வழிகளில் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும், மாநாடு திடலில் எல்.இடி திரைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும், திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தவெக மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் இந்த நிந்தைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தவெக மாநாடு குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் மாநாடு ஏற்பாடுகள், கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் மாநாட்டிற்கு இன்னும் 1 மாதமே உள்ளதால் மாநாட்டுப் பணிகளை விரைவுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மாநாடு குறித்து தவெக நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை இன்று வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?