அதிகாரியால் வந்த வினை..தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு எப்போது? விவசாயிகள் கோரிக்கை

தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அதிகாரியின் தவறான தகவலால் தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு ரூ.50,000 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Apr 7, 2025 - 15:34
Apr 12, 2025 - 13:19
அதிகாரியால் வந்த வினை..தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு எப்போது? விவசாயிகள் கோரிக்கை
தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு எப்போது?

தமிழ்நாடு முழுவதும் தர்பூசணி குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ளது என்னமோ பெரும்பாலும் தர்பூசணி விளைவித்த விவசாயிகள் தான். இந்நிலையில் தர்பூசணி விளைவித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”தமிழ்நாடு அரசின் உணவு துறையின் உயர் அதிகாரி சதீஸ் என்பவர் தர்பூசணி பழங்களில் ஊசி போட்டு கலப்படம் செய்கிறார்கள் என்று தெரிவித்த தவறான, உள்நோக்கம் கொண்ட, அவதூறான கருத்தால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கிலோ 15 ரூபாய்க்கு விற்று வந்த தர்பூசணி தற்போது கிலோ 3 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. இதனால் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஏக்கருக்கு தலா ரூ.50,000 கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

https://cenlib.tu.edu.iq/

கள்ளச்சாராயத்துக்கு 10 லட்ச இழப்பீடு: 

வாங்கி விற்ற வியாபாரிகளும் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார்கள். அரசு ஊழியர் தெரிவித்த தவறான கருத்துக்களால் பொது மக்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது இயற்கை நியதியாகும். தமிழ்நாடு அரசின் காவல்துறையால் கள்ளச்சாராய  விற்பனையை தடுக்க முடியாததால், ஏற்பட்ட இழப்புகளுக்கு தமிழ்நாடு அரசு குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியதைபோல, தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அதிகாரியால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே சரியானதாகும். 

எனவே தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தர்பூசணி பயிரிட்டு, தமிழ்நாடு அரசு ஊழியரின் தவறான கருத்தால் நஷ்டமடைந்து, கடனாளியாகி, கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் ஏக்கருக்கு தலா ரூ.50,000 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  தமிழ்நாடு அரசு இழப்பீடாக வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: லட்சம் ரூபாய் போட்டும் தேறல.. நிலத்தில் அழுகும் தர்பூசணி.. வேதனையில் விவசாயிகள்

https://cenlib.tu.edu.iq/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow