போர் நினைவுச் சின்னம் பகுதியில் படமாக்கப்பட்ட முதல் படம்… இடி மின்னல் காதல் உருவான கதை இதுதான்!

பாலாஜி மாதவன் இயக்கியுள்ள இடி மின்னல் காதல் திரைப்படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படம் உருவானது குறித்து பாலாஜி மாதவன் தனது அனுபவங்களை ஷேர் செய்துள்ளார்.

Mar 15, 2024 - 13:10
Mar 15, 2024 - 14:16
போர் நினைவுச் சின்னம் பகுதியில் படமாக்கப்பட்ட முதல் படம்… இடி மின்னல் காதல் உருவான கதை இதுதான்!

வஞ்சகர் உலகம், மாஸ்டர், துணிவு படங்களில் நடித்த சிபிசந்திரன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் இடி மின்னல் காதல். இந்தப் படத்தில் யாஸ்மின் பொன்னப்பா, பவ்யா, ராதாரவி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எமோஷனல் ட்ராமாவாக உருவாகியுள்ளை இடி மின்னல் காதல் திரைப்படம் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்தும் இது உருவான விதம் பற்றியும் இயக்குநர் பாலாஜி மாதவன் மனம் திறந்துள்ளார்.    

அதாவது, “சென்னை துறைமுகம் பகுதியில் ஹீரோவின் கார் விபத்துக்குள்ளாகிறது. அதிலிருந்து கதை தொடங்கி, வெவ்வேறு கிளைகளாக பயணிக்கிறது. க்ளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாது. சென்னை போர் நினைவுச் சின்னம் பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது. ராணுவ கட்டுப்பாட்டில் அந்த ஏரியா இருக்கிறது. ஆனாலும், அதிகாரிகளிடம் கதை சொல்லி அந்த காட்சியி்ன முக்கியத்துவத்தை விவரித்து சிறப்பு அனுமதி வாங்கி அங்கே படப்பிடிப்பு நடத்தினோம்.”  

நாங்கதான் அங்கே படப்பிடிப்பு நடத்திய முதல் படக்குழு குழு. அதேபோல் ஆரண்யகாண்டம் படத்தில் நடித்துவிட்டு பெங்களூரில் செட்டிலாகிவிட்ட யாஷ்மின் பொன்னப்பாவை தேடி கண்டுபிடித்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். அவரும் கதைக்காக இடி மின்னல் காதல் படத்தில் நடித்துக் கொடுத்தார். படத்துல காதல் மட்டுமல்ல, அதிரடி சண்டைக் காட்சிகளும் உள்ளன, ஹீரோயின் பவ்யாவும் அதில் கலக்கியிருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பக்காவா ரிகர்சல் பார்த்து, நிறைய அனுபவத்துடன் சென்றோம். அது எளிதாக இருந்துதுஎனக் கூறியுள்ளார் பாலாஜி மாதவன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow