மக்களவைத் தேர்தல் 2024; வாக்களித்தார் பிரதமர் மோடி...
மக்களவை தேர்தலில் இன்று, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்டமாக குஜராத் உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுகளில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் ராணிப்பில் உள்ள நிஸான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பொதுவாக, தேர்தலின் போது தனது தாய் ஹீரா பென்னை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இந்த நிலையில், அவர் மறைந்ததை அடுத்து வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று தனது வாக்கை பதிவு செய்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார். வாக்களித்த பின் செய்தியாளரிடம் பேசிய அவர், நமக்கு கடமை தான் முக்கிய எனக் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?