சவுக்கு சங்கருக்கு சிறையில் சித்ரவதை... "கை எலும்பு முறிந்திருச்சு" உயிருக்கு ஆபத்து - வழக்கறிஞர் பரபரப்பு தகவல்
"பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து"

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கரின் கையை போலீசார், பிளாஸ்டிக் பைப்பால் அடித்தே உடைத்துள்ளதாகவும், விவரம் வெளியே தெரியாமல் இருக்க சிறை அதிகாரிகள், சிறைக்குள்ளையே இந்த பிரச்னையை சரிசெய்ய பார்ப்பதாகவும் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் அண்மையில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சவுக்கு சங்கரை பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பிளாஸ்டிக் பைப்பில் தாக்கி உள்ளதாகவும், இதில் சவுக்கு சங்கருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன், ovo88 வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கரை சிறையில் நேரில் பார்த்த அவரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் அரசையும், தவறு செய்யும் அதிகாரிகளையும் பற்றி பேசுபவர்களின் குரல்கள் நசுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
சிறையில் சவுக்கு சங்கரின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக கூறும் அவரின் வழக்கரிஞர், இதில் நீதிமன்றம் தலையிட்டு அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?






