உடன்பாடு எட்டப்படப்படாத மதிமுகவுடனான பேச்சுவார்த்தை?

உடன்பாடு எட்டப்படப்படாத மதிமுகவுடனான பேச்சுவார்த்தை?

Feb 4, 2024 - 12:42
Feb 4, 2024 - 15:36
உடன்பாடு எட்டப்படப்படாத மதிமுகவுடனான பேச்சுவார்த்தை?
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது மதிமுகவிற்கு 3 இடங்கள் வேண்டும் என திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் கேட்கப்பட்டதாகவும் அதில் உடன்பாடு எட்டப்பட வில்லை எனத்  தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடான கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம்  காட்டி வருகின்றன. திமுக -காங்கிரஸ் கூட்டணியின்  தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முதல் கட்டம் முடிந்த நிலையில், மீதமிருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனையானது அடுத்தடுத்த கட்டங்களை எட்டியுள்ளது. 
சிபிஐ உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று  அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது அதில் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத், சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், கனகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
பின், மதிமுக சார்பில் நடந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 3 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை திமுக பேச்சுவார்த்தை குழுவினரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது . முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து வந்த பிறகு அவரிடம் இடங்கள் குறித்துப் பேசி முடிவு செய்து கொள்ள திமுக கூட்டணி பேச்சு வார்த்தை குழு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow