சர்வதேச மகளிர் தினம்... எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான், கமல்ஹாசன் வாழ்த்து...
உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச் செய்தியில், ’மகளிர் தினமான இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’ என வாழ்த்து கூறியுள்ளார்.
இன்று மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நிமிர்ந்த நன்னடை,
நேர்கொண்ட… pic.twitter.com/JTkYI6CNsE — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 8, 2024
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் வாழ்த்து செய்தியில், ’சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கும் விதமாக கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச மகளிர் தினமான இன்று, நமது நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமருக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்’ எனவும் கூறியுள்ளார்.
சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கும் விதமாகக் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்… pic.twitter.com/CVJoxBld5E — K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 8, 2024
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாழ்த்து செய்தியில், ’பெண்மையைப் போற்றாத எந்தச் சமூகமும் முன்னேறாது. ஆணும், பெண்ணும் சமம். பெண்மையைப் போற்றுவோம், பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், ’நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை. அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம். சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
--------
What's Your Reaction?