"நேதன்யாகு செயல் இஸ்ரேலை காயப்படுத்துகிறது..." அமெரிக்க அதிபர் ஜோபைடன் கருத்து...
காசா மீதான நேதன்யாகுவின் போர் யுக்தி இஸ்ரேலுக்கு உதவுவதை காட்டிலும் கடுமையான பாதிப்பையே ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், தெற்கு காசாவின் ரஃபா மீதான தாக்குதல், மனித உரிமைகளை மீறிவதாக உள்ளதா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அதிபர் பைடன், "இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இஸ்ரேலை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உள்ளது. ஹமாஸ் மீது தாக்குதலைத் தொடரவும் உரிமை உள்ளது. ஆனால், அப்பாவி கொல்லப்படுவது குறித்து கவனமுடன் இருக்க வேண்டும்" என்றார். அதோடு, தன்னைப் பொறுத்தவரை நேதன்யாகு இஸ்ரேலுக்கு உதவுவதை விட பாதிப்புகளையே அதிகம் ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
"ரஃபா மீதான தாக்குதலால் 15 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மனித உரிமை மீறல் தான்" எனக் குறிப்பிட்ட அவர், இந்த தவறுக்காக இஸ்ரேலை மன்னிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?