நோன்பு கஞ்சிக்காக 7,040 மெட்ரிக் டன் அரிசி... தமிழக அரசு உத்தரவு...
ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க 7,040 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2024-ம் ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?