எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு...நாகை மீனவர்களை கூண்டோடு பிடித்துச்சென்ற இலங்கை கடற்படை
நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறைபிடித்தனர்.
நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறைபிடித்தனர்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறை வடகிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நெடுந்தீவு அருகே சென்ற போது, அங்கு ரோந்துப் பணிக்காக சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிலம்பு செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் சென்றதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடி. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?