சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.. செங்கல்பட்டு தம்பதியின் நெகிழ்ச்சி செயல்..

May 3, 2024 - 17:35
சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.. செங்கல்பட்டு தம்பதியின் நெகிழ்ச்சி செயல்..

செங்கல்பட்டு அருகே தங்களது கிராமத்திற்கு சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்த குடும்பத்தினர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் கெண்டிரச்சேரி  கிராமத்தை சேர்ந்தவர்கள் சம்பத் - குப்பம்மாள் தம்பதி. இவர்கள்  தங்களது கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ரூ.10 லட்சம் செலவில் சொந்தமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளனர். 

இன்று அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையத்தை சம்பத் - குப்பம்மாள் தம்பதியினர் திறந்து வைத்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கீர்த்தனா ரகுவிடம் ஒப்படைத்தனர்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சம்பத் – குப்பம்மாள் தம்பதி தங்களது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு கிராம மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இதுபோல ஒவ்வொரு கிராமத்திற்கு ஒரு குடும்பம் இருந்தால் அதை பொற்காலம் என்று சொன்னாலும் மிகையில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow