சென்னையில் 222 கிலோ வெள்ளி நகைகள் திருட்டு.. 2 கடை ஊழியர்கள் கைது

May 1, 2024 - 16:10
சென்னையில் 222 கிலோ வெள்ளி நகைகள் திருட்டு.. 2 கடை ஊழியர்கள் கைது

சென்னை தி.நகரில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 222 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் 2 கடை ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் சலானி என்ற பெயரில் வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகளை விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடையின் உரிமையாளர் ஜெயந்திலால் சலானி, கடையில் உள்ள வெள்ளி நகைகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். 

அப்போது ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 222 கிலோ வெள்ளி நகைகள் இருப்பு குறைவாக இருந்ததை அறிந்து அதிர்ந்தார். 
தொடர்ந்து அவர் கடையில் சிசிடிவி காட்சிப்பதிவுகளை ஆராய்ந்த போது, கடையில் பணிபுரிந்து வந்த சரவணன், அஜ்மல், மகேந்திரன், வினோத், பிங்கேஷ், மதன்  ஆகிய 6 ஊழியர்களும் சேர்ந்து, சிறுக சிறுக கடையில் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது. 

அந்த வெள்ளிப்பொருட்களை வெளியே விற்று சுகபோக வாழ்கை வாழ்ந்து வந்ததை அறிந்த சலானி, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் கடை ஊழியர்கள் சரவணன், பிங்கேஷை அதிரடியாக கைது செய்தனர். 

இதேவேளையில் தலைமறைவான 4 ஊழியர்களையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அஜ்மல், மகேந்திர சிங் ஆகியோரை பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரையும் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow