2வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கில், இஷான் கிஷன் சதம்   இந்திய அணி 402 ரன்கள் குவிப்பு 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 402 ரன்களை குவித்துள்ளது. 

2வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கில், இஷான் கிஷன் சதம்   இந்திய அணி 402 ரன்கள் குவிப்பு 
கில், இஷான் கிஷன் சதம்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணிக்கு லக்னோவில் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இதை ஓபன்னிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா தனது பங்கிற்கு 48 ரன்களை எடுத்து ரஷித் கான் பந்தில் போல்ட் ஆனார். இதன் பின்னர், கேப்டன் சுப்மன் கில், இஷான் கிஷன் இணைய அபாரமாக விளையாடியது. ஆப்கானிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை அதிரடியாக இருவரும் சதம் அடித்தனர். 

சுப்மன் கில் 110 பந்துகளில் 154 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 79 பந்துகளில் 125 ரன்களை குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். 49.5 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 402 ரன்களை குவித்தது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow