இளைப்பாற இடம் வேண்டும்! இதையும் செய்வீங்களா? முதல்வருக்கு யோசனை......

இப்போதெல்லாம் வார விடுமுறை / சிறப்பு விடுமுறை நாட்களில், இரு சக்கர வாகனங்களில் சென்னை யிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. சனி, ஞாயிறு என்றாலே, கார்களில் சுற்றுலா கிளம்பிவிடும் இளைஞர்களும் குடும்பங்களும் அதிகரித்துக்கொண்டே போவதையும் பார்க்க முடிகிறது.

இளைப்பாற இடம் வேண்டும்! இதையும் செய்வீங்களா? முதல்வருக்கு யோசனை......
weekend travel boom

பெரும்பாலான இளைஞர்கள், கையோடு ஒரு லேப் டாப்பும் கொண்டு செல்கின்றனர். ஆங்காங்கே நிறுத்தி, தமது அலுவலகப் 24.6.2026பணியையும் அவ்வப்போது செய்து கொள்கின்றனர். இதில் உள்ள சாதக பாதகங்களை விடுங்கள்: அது தனி! ஆனால், இந்த நீண்ட தூரப் பயணங்களின் போது அயர்ச்சி காரணமாகவே விபத்துகள் அதிகம் நடக்கின்றன. சற்றே ஓய்வெடுக்க ஒதுங்கலாம் என்றால், நெடுஞ்சாலையின் ராட்சசப் போக்குவரத்தில், வண்டியைப் பாதுகாப்பாக நிறுத்தவும் இடம் இல்லாத தவிப்பு!

நீண்ட தூரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்குத் தேவை எல்லாமே. ஓரிரு மணி நேர ஓய்வு, சூடாக ஒரு தேநீர், முகம் கழுவ, குடிக்கத் தூய்மையான குடிநீர்! தேசிய மற்றும் மாதில நெடுஞ்சாலைகளில் அரசுக்குச் சொந்தமான எவ்வளவோ நிலம் காலியாகக் கிடக்கிறது. ஒரு கிரவுண்டு அளவில் இரண்டு அல்லது மூன்றடுக்கு 'POD' எனப்படும் ஓய்வுப் படுக்கைகள் அமைத்துக் கொடுக்கலாமே?' சுமார் 50 கி.மீ. தூர இடைவெளியில் இப்படி இளைப்பாறும் இடம் அமைக்கலாம். அதில் ரயில்களிலும் இரவு நேரப் பேருந்துகளிலும் உள்ளது போன்று 'berth' படுக்கை/சாய்வு இருக்கை 'இயற்கை' வசதி wi-fi' இணைப்பு, குறைந்த அளவிலேனும் தின்பண்டங்கள் காபி, தேநீர் வசதி.

89எல்லா வாகனங்களிலும் முகப்பு விளக்கின் மேற்பாதி, கறுப்பு மையால் மறைக்கப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும். ஒரு காலகட்டத்தில் விழிப்போடு நடந்த இந்தக் கண்காணிப்பு இப்போது இல்லை. இதனை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முகப்பு விளக்கின் மேற்பாதி மறைக்கப் படுவதால், எதிர்வரும் வாகன ஓட்டுநர்களின் கண்களில் அதீத வெளிச்சம் ஊடுருவி, அழற்சி / களைப்பு / சோர்வு ஏற்படுதல் தடுக்கப்படும். இதனால் நெடுஞ்சாலை விபத்துகள் பெருமளவில் உடனடியாகக் குறையும். இப்படி மேற்பகுதியை மறைக் காத வாகனங்களுக்குக் கடுமையாக அபராதம் விதிக்க வேண்டும்.

 அதேபோல், Fog Lamp எனப்படும் அதி வெளிச்சம் கொண்ட முகப்பு விளக்கு பொருத்திய வாகனங்களையும் முற்றிலுமாகத் தடை செய்வது விபத்துகளைக் குறைக்க உதவும். கிடைத்தால் நன்றாக இருக்கும். வாகனத்தை நிறுத்தவும். ஒவ்வொரு தனி மனிதரும் படுத்துச் சற்றே குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருக்கவும் (Bunker Bed), மணிக்கு இத்தனை ரூபாய் என்று நியாயமான கட்டணத்தை அரசே நிர்ணயிக்கலாம். இதற்கென்ற ஒரு மொபைல் செயலி உருவாக்கி, இதுபோன்ற POD ஓய்வு மையங்களின் பட்டியலையும், பயணி இருக்கும் இடத்திலிருந்து அது எத்தனை தொலைவில் உள்ளது என்பதையும் காட்டி, முன்கூட்டிப் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத் தித் தந்தால்... அரசுக்கு வருமானத்துக்கு வருமானம் விபத்துகளும் குறையும்!

கடும் வெயில், மழை யிலிருந்து நிவாரணம் அவர அலுவலகப் பணி செய்ய அவகாசம், தவிர்க்க முடியாத இயற்கை அழைப்புக்கும் பாதுகாப்பான, சுத்தமான இடம் இத்தனையும் இந்கே உறுதி செய்யப்பட வேண்டும் நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்துத் துறை. பொதுப்பணித்துறை அல்லது சுற்றுலாத்துறை வசம் இப்பணியை ஒப்படைக்கவாம் அரசேகூட நடத்தவேண்டும் என்ப என்பதில்லை; முறையாக ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கும் விடலாம். ஆனால், ஒருங்கிணைப்பது அரசாகத்தான் இருக்க வேண்டும்!

ஏன் முயற்சி செய்யக் கூடாது...?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow