5 வது டெஸ்ட்: இந்தியா அபாரம்! - முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 135/1
இங்கிலாந்திற்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியுள நிலையில், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தர்மசலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், அஸ்வின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி அதிகபட்சமாக 79 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் குல்தீப் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய ரோகித் ஷர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவித்தது. ஜெய்ஸ்வால் 57 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
What's Your Reaction?