காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்..! "வெறுப்பு நிறைந்த அசுர சக்தி" என ராகுல்காந்தி விமர்சனம்..!

மீண்டும் அசுர சக்திக்கு எதிராக நாங்கள் கடுமையாக போராடுவோம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Mar 21, 2024 - 16:36
Mar 21, 2024 - 16:38
காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்..! "வெறுப்பு நிறைந்த அசுர சக்தி" என ராகுல்காந்தி விமர்சனம்..!

காங்கிரஸின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, மீண்டும் அசுர சக்தியை எதிர்த்து போராடுவோம் என சூளுரைத்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பாரத் நியாய யாத்திரையை நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, இந்து மதத்தில் 'சக்தி'என்ற வார்த்தை உள்ளது. குறிப்பாக அசுர சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று பேசியிருந்தார்.  இதையடுத்து பாஜக தலைவர்கள் ராகுல்காந்தியை கடுமையாக சாடினர். குறிப்பாக, சமூக வலைதளங்களின் வாயிலாகவும் கடும் விமர்சனங்கள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. 

இதற்கு விளக்கமளித்த ராகுல்காந்தி, தான் அசுர சக்தி எனக்கூறியது ஆளும் அரசை, இந்து மத கடவுளை அல்ல என விளக்கமளித்தார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மீண்டும் அசுர சக்திக்கு எதிராக நாங்கள் கடுமையாக போராடுவோம் என தெரிவித்துள்ளார். அத்துடன் காங்கிரஸின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது இந்திய ஜனநாயக நாடு என்ற கருத்தை முழுப் பொய்யாக்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாகவும்  குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸின் அனைத்து வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களால் பிரசாரம் செய்ய முடியவில்லை எனவும் ராகுல்காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow