தேனியில் அரியவகை மரம் மூலிகைகளை நாசம் செய்யும் காட்டுத் தீ... சமூகவிரோதிகள் கைவரிசை...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தைலாராமன் மலைக்கோவில் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் தீக்கிரையாகின.

Mar 11, 2024 - 11:55

பெரியகுளம் அருகே உள்ள தைலாராமன் மலைக்கோவிலைச் சுற்றி அரியவகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன். இந்த நிலையில் கோவிலை சுற்றி உள்ள வனப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால், 50 ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி தீயால் எரிந்தது.

கோவிலைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ தொடர்ந்து எரிவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென சுற்றுவட்டார மக்கள் வனத்துறையை வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இயற்கை வளங்களைப் பாதுகாக்க கோவில் வனப்பகுதியில் தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திடவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow