பேரிடர் மீட்புப் பணி -  அவசர கால வெள்ள மீட்பு குழு அமைப்பு

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புப் பணி -  அவசர கால வெள்ள மீட்பு குழு அமைப்பு

பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசர கால வெள்ள மீட்பு குழுக்கள் அமைக்கப்படும். இதன்படி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. 

நீர்வளத்துறையின் 147 பொறியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் செயல்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.இந்த குழுவினர் இயற்கை பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.  

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களின் அறிவுறுத்தல்படி இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று அந்தப் பகுதியில் நீர்வளத்துறை அதிகாரியுடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாசன கட்டமைப்பு மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை பாதிக்காத வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளுக்காக சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் வெள்ள பாதிப்பு இடத்திற்கு செல்லும் நாட்கள் அவர்கள் தலைமையகத்தில் பணியில் இல்லாமல் இருந்தாலும் அது அவர்கள் பணியில் உள்ள நாட்களாகவே கருதப்படும் என கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow