97.92% பேருந்துகள் இயக்கம்: போராட்டத்தால் பேருந்து சேவை பாதிப்பா?-களநிலவரம் சொல்வது என்ன?

தற்காலிக பேருந்து ஓட்டுநர்களால் 4க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.

Jan 10, 2024 - 12:39
Jan 10, 2024 - 18:43
97.92% பேருந்துகள் இயக்கம்: போராட்டத்தால் பேருந்து சேவை பாதிப்பா?-களநிலவரம் சொல்வது என்ன?

தமிழகத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 97.92% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும்,  15,728 பேருந்துகளில் 15,401 பேருந்துகளும், சென்னையில் 99.29% மாநகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சில இடங்களில் பேருந்துகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், திருவள்ளூர் பணிமனையில் இருந்து 45 % பேருந்து மட்டுமே காலை 7 மணி நிலவரப்படி இயக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலையில் செல்லக்கூடிய பேருந்துகள் கால தாமதமாக இயக்கப்பட்டது. 

இதேபோல் ஓட்டுநர்கள் தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள் என்றும் அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நடத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  பொங்கல் விழாவிற்கு வெளியூர் செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர்.

தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு காரணமாக பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.காலை 6 மணி நிலவரப்படி 25 பேருந்துகள் இயக்கபடுகின்ற வேலையில் 25 அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் சமச்சீரான இடைவெளியில் இயக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் குளித்தலை அரவக்குறிச்சி என மூன்று பணிமனைகளில் இருந்து 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.பேருந்து நிலையங்களில் பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகிறது. தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.மதுரையில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. தங்குத்தடையின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சேலம் கோட்டம்  மற்றும் விழுப்புரம் கோட்டம் ஆகிய இரு போக்குவரத்து பனிமனையில் உள்ளன.இதில் சேலம் கோட்டத்தில் மொத்தம் 64 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 44 புறநகர் பகுதிகளிலும் 20 நகர் பகுதிகள் ஆகும்.அதில் தற்போது புறநகர் 11 பேருந்துகள் மற்றும்  நகரில் 4 என மொத்தம் 15பேருந்துகள் சென்றுள்ளது. காலை நேரபடி 25 பேருந்துகள் சென்று இருக்க வேண்டும். ஆனால் 15 பேருந்துகள் மட்டுமே சென்றது. 

அதேபோல் விழுப்புரம் பணிமனையில் இருந்து மொத்தம் 119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 95 பேருந்துகள் புறநகர் பகுதிகளிலும் 24 பேருந்துகள் நகர் பகுதியில் இயக்கப்பட்டது.அதில் தற்போது புறநகர் 14 பேருந்துகளும், நகர் பகுதியில் 3 இயக்கப்பட்டுள்ளன.

 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மொத்தம் 60 அரசு பேருந்துகளில் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பேருந்துகள் இல்லாமல் பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் தொ.மு.ச மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஓட்டுநர்களால் 4க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பயணிகளின் உயிருடன் விளையாட வேண்டாம் என்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு தொழிசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow