இன்று முதல் பிளஸ் 2 ஹால் டிக்கெட்..தலைமை ஆசிரியர்கள் அலர்ட்! எப்படி பதிவிறக்கணும் தெரியுமா?

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Feb 20, 2024 - 08:01
இன்று முதல் பிளஸ் 2 ஹால் டிக்கெட்..தலைமை ஆசிரியர்கள் அலர்ட்! எப்படி பதிவிறக்கணும் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் நிலை இன்று (பிப்.20-ம் தேதி) முதல் ஹால்டிக்கெட்டுகளை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதேபோல் 11-ம் வகுப்பிற்கு மார்ச் 4 முதல் 25 வரையிலும், 10-ம் வகுப்பிற்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டை பள்ளிக்கல்வித்துறையின் வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இன்று (பிப்.20-ம் தேதி) பிற்பகல் முதல்  www.dge.in.gov.in என்ற வலைதளம் மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வறை நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான Online Portal என்ற இடத்தைக் கிளிக் செய்து, Higher Secondary First year/Second year exam March - 2024 என்ற பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password-ஐ உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow