கச்சத்தீவை காங்கிரசும் திமுகவும் திட்டமிட்டே தாரைவார்த்துவிட்டார்கள்! அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு.. 

காங்கிரசும் - திமுகவும் திட்டமிட்டு சதி செய்து தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 

Apr 2, 2024 - 02:04
கச்சத்தீவை காங்கிரசும் திமுகவும் திட்டமிட்டே தாரைவார்த்துவிட்டார்கள்! அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு.. 

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  காங்கிரசும் - திமுக.,வம் 1974ல் திட்டமிட்டு சதி செய்து தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்திருக்கிறார்கள். இதில் திமுகவுக்கு முழு பங்களிப்பு இருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகத்திற்காக கச்சத்தீவை மீட்டு தாருங்கள் என இதுவரை 21 முறை கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடம் கொடுக்க கருணாநிதியிடம் வெளியுறவு செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதி, கச்சத்தீவை கொடுக்க சம்மதம் இல்லை என கூறியிருந்தால் மத்திய அரசு கொடுத்திருக்காது.

அப்போது கச்சத்தீவை கொடுக்க சம்மதித்துவிட்டு இப்போது கடிதம் எழுதுகின்றனர். காங்கிரசும் - திமுகவும் எப்போதெல்லாம் ஒன்று சேர்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதி மற்ற நாடுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும்  திமுக தான் காரணம் என்று அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கச்சத்தீவு பிரச்னையை தீர்க்க என்னென்ன  சாத்தியக்கூறுகள் உள்ளதோ,  அதையெல்லாம்  மத்திய அரசு ஆராய்ந்துக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளதாக அண்ணாமலை கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow