பெருன்பான்மையை நிரூபித்து வெற்றியை தனதாக்கினார் சம்பாய் சோரன்..!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றியைத் தனதாக்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இவர் நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி நீண்ட நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அவரை கடந்த 31-ம் தேதி கைது செய்தது.
இதனையடுத்து அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமான சம்பாய் சோரன் என்பவர் முதல்வராகப் பதிவு ஏற்றிருந்தார். எனினும், ஆட்சியமைக்க அவர் உரிமைகோரிய நிலையில், அம்மாநில ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நீண்ட இழுபறிக்குப்பின்னர், அவர் முதல்வர் பதவியேற்றார். அப்போது அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் முதல்வரைத் தெரிவு செய்ய அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, இன்று சிறப்புக் கூட்டத்தொடர் கூடியது. அதில், சம்பாய் சோரன் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், அதில் ஒன்று தற்போது காலியாக உள்ளது. மீதமுள்ள 80 தொகுதிகளில், சம்பை சோரன் தலைமையிலான அரசுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க 41 எம்எல்ஏ -க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.ஏற்கனவே, முக்தி மோர்ச்சா கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 46 பேர் உள்ளனர். பாஜக ஆதரவாக 29 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கச் சம்பை சோரன் அரசுக்கு 41 எம் எல் ஏக்களின் வாக்குகள் தேவைப்பட்டது.
அப்படியிருக்க, சம்பை சோரன் அரசுக்கு ஆதரவாக 47 எம் எல் ஏக்கள் வாக்களித்தனர்.பெரும்பான்மைக்கும் அதிகமாக 6 வாக்குகள் வித்தியாசத்தில் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு வெற்றியை தனதாக்கியது. இதன்மூலம் ஜார்க்கண்ட் முதலமைச்சராகத் தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்டார் சம்பாய் சோரன்.
இதையும் படிக்க | சுற்று காவலர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட இருசக்கர வாகனம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
What's Your Reaction?