அதிமுக பொங்கல் கொண்டாட்டம் : மாட்டு வண்டியில் வர போகும் எடப்பாடி பழனிசாமி
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அதிமுக திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் வருகை தந்து பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கிறிஸ்துவ விழா: கேக் வெட்டும் எடப்பாடி
கிறிஸ்துவ மற்றும் பொங்கல் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இந்தாண்டு கிறிஸ்துவ பெருவிழா நாளை அதிமுக சார்பில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு வருகின்ற நாளை மறுநாள் 18.12.2025 வியாழக் கிழமை மாலை 4.30 மணியளவில், சென்னை, கீழ்பாக்கம், CSI லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்களும், அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
எடப்பாடி மாட்டு வண்டியில் வலம் வர ஏற்பாடு
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டூர் தொகுதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொளத்தூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலான மேட்டூர் தொகுதி நிர்வாகிகள் கிராமத்தை தேர்வு செய்யும் பணியில் டிச 16-ம் தேதி ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கோனூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் பிரம்மாண்டமாக 108 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.பழனிசாமியை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரவும், கலை நிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
What's Your Reaction?

