பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: யார் யாருக்கு எந்த தொகுதி லிஸ்ட் இதோ 

விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தில் வெளியாக உள்ளதாக தெரிகிறது. 

பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: யார் யாருக்கு எந்த தொகுதி லிஸ்ட் இதோ 
பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அதிமுக, திமுக தலைமையில் இரு அணிகளும். தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் வேட்பாளர் தேர்வு பணியிலும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே விருப்பமனுவை பெற்ற அதிமுக. வேட்பாளர் நேர்காணலையும் நடத்தி முடித்து இருக்கிறார். கூட்டணி கட்சிகள் போக 170 தொகுதிகளில் களமிறங்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு கட்டமாக எடப்பாடி வெளியிட்டார். இதே போன்று பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளான்று அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். 15 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்றைய தினம் வெளியாகும் என தெரிகிறது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் களமிறங்க உள்ளார். எஸ்.பி.வேலுமணி, தொண்டமுத்தூர், தங்கமணி - குமாரபாளையம், சி.வி.சண்முகம் - மயிலம், டி.ஜெயக்குமார் - ராயபுரம், பா.வளர்மதி-ஆயிரம் விளக்கு, உதயகுமார் - திருமங்கலம், சி.விஜயபாஸ்கர்-விராலிமலை  என 15 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow