அதிமுகவ பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.. Simply Waste! புதுச்சேரியில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக கூட்டணி குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை, சிம்பிளி வேஸ்ட் என்று திரைப்பட நகைச்சுவைக் காட்சியின் பாணியில் விமர்சனம் செய்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து சிங்காரவேலர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,கலைஞர் அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய மண் புதுச்சேரி. புதுச்சேரி சட்டமன்றத்தை ஒரு களை கூத்தாக ஆக்கினார் ஒரு ஆளுநர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு ஒத்துழைக்காமல் அரசை முடக்கினார் கிரண்பேடி. தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு ஆளுநர் உள்ளார். அவரும் ஐபிஎஸ் அதிகாரி தான். பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை ஆளுநர் ஆக்கி அவர்களை பாஜக ஏஜெண்டாக செயல்பட வைக்கின்றனர். மாநிலங்களை யூனியன்களாகவும், யூனியன் பிரதேசங்களை பஞ்சாயத்துகளாக பாஜக மாற்ற பார்க்கிறது.
ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு அமையும் போது எங்களது தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவோம். மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் குறைக்கப்படும். புதுச்சேரியில் புதிய கல்விகொள்கை முற்றிலுமாக நீக்கப்படும். விவசாயிகளின் பழைய கடன்கள் தள்ளுபடி செய்து புதிய கடன்கள் வழங்கப்படும். முக்கியமாக மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து பொதுவிநியோக திட்டம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதுச்சேரியில் அதிமுக போட்டியிடுகிறது. அந்த கூட்டணியைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகைச்சுவைக் காட்சியின் பாணியில் சிம்ப்ளி வேஸ்ட் என்று நக்கலடித்து விமர்சித்தார்.
What's Your Reaction?