Ajith AK 64: அடுத்தக் கூட்டணிக்கு ரெடியான அஜித்... AK 64 இயக்குநர் இவரா..? அடிபொலி!
அஜித்தின் 64வது படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த அஜித், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் பிஸியாகிவிட்டார். மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. அதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் – ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி, அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், அதற்கு முன்பாக விடாமுயற்சி படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் மகிழ் திருமேனி. குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தனது அடுத்தப் படத்துக்கான இயக்குநர் யார் என்பதை முடிவு செய்ய ரெடியாகிவிட்டாராம் அஜித். கோட் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். கோட் ஷூட்டிங் முடிந்ததும் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க விஜய் பிளான் செய்துள்ளார். இதன் காரணமாக மாஸ் ஹீரோக்களுக்கான கதையை ரெடி செய்து வைத்துள்ள முன்னணி இயக்குநர்கள், அஜித்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
அதேபோல், அஜித்தும் அடுத்தடுத்து பல இயக்குநர்களிடம் கதை கேட்டு கால்ஷீட் கொடுத்து வருகிறார். அதன்படி தற்போது இயக்குநர் மோகன் ராஜா சொன்ன கதையை ஓக்கே செய்துள்ளாராம் அஜித். ஜெயம் ரவியின் அண்ண னான மோகன் ராஜா, ரீமேக் படங்களின் ஸ்பெஷலிஸ்ட்டாக வலம் வந்தார். ஆனால், ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த தனி ஒருவன் திரைப்படம் அவரது கேரியரையே தூக்கி நிறுத்தியது. கடைசியாக அவர் தெலுங்கில் இயக்கிய காட்ஃபாதர் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது. முக்கியமாக ஃபீல்ட் அவுட்டாகியிருந்த டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும் சூப்பரான கம்பேக் மூவியாக அமைந்தது. அதேநேரம் இது மலையாளத்தில் ஹிட்டடித்த லூசிபர் படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் 2ம் பாகத்தை இயக்கவிருந்தார் ஜெயம் ரவி. ஆனால், இந்தப் படம் இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து அஜித்துக்கு கதை கூறி அவரது கால்ஷீட்டை வாங்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அஜித் – மோகன் ராஜா கூட்டணி விரைவில் உறுதியாகிவிடும் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் மீண்டும் சிரஞ்சீவியுடன் கூட்டணி வைக்கவுள்ளாராம் மோகன் ராஜா. இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் ஜூன் அல்லது ஜூலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரஞ்சீவியின் படத்துக்குப் பின்னரே அஜித்தின் ஏகே 64 தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் ஏகே 64 ஜெயம் ரவி நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
What's Your Reaction?