Sikandar: சல்மான்கானுக்கு வில்லனாகும் கோலிவுட் பிரபலம்.. சிக்கந்தர் அப்டேட்.. ரெடியான AR முருகதாஸ்

சல்மான் கான் – ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் சிக்கந்தர் படத்தில், கோலிவுட் பிரபலங்கள் இருவர் வில்லனாக நடிக்கவுள்ளனர்.

May 25, 2024 - 12:49
Sikandar: சல்மான்கானுக்கு வில்லனாகும் கோலிவுட் பிரபலம்.. சிக்கந்தர் அப்டேட்.. ரெடியான AR முருகதாஸ்

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைந்துள்ளார். அஜித்தின் தீனா படத்தில் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ், அதன்பின்னர் பான் இந்தியா அளவில் மாஸ் காட்டினார். ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அமீர்கான் என மாஸ் ஹீரோக்களை இயக்கியுள்ளார். அதேநேரம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான தர்பார் படுதோல்வியை சந்தித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன.

இதனையடுத்து விஜய் படத்தை இயக்கவிருந்த ஏஆர் முருகதாஸ், அதிலிருந்தும் விலகினார். பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், ஹீரோவே இல்லாமல் அனிமேஷன் படத்தை இயக்கவிருந்ததார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார். அதன்படி சிவகார்த்திகேயன் 23வது படத்தை இயக்கி வரும் ஏஆர் முருகதாஸ், இன்னொரு பக்கம் சல்மான் கானின் கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார். சிவகார்த்திகேயன், ஏஆர் முருகதாஸ் என இருவரும், முதன்முறையாக ஏஆர் முருகதாஸுடன் இணைகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தப் படத்தின் டைட்டில், ரிலிஸ் தேதி ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், சல்மான் கான் – ஏஆர் முருகதாஸ் இணையும் படத்துக்கு சிக்கந்தர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது அடுத்தாண்டு ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துவிட்டது. இதனால் சீக்கிரமே எஸ்கே 23-ஐ முடித்துவிட்டு, சிக்கந்தர் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என ஏஆர் முருகதாஸ் பிளான் செய்துள்ளார். இந்தப் படத்தில் சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளாராம்.

அதேபோல் சிக்கந்தர் படத்தில் கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் வில்லனக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, அர்விந்த் சாமி, பிரகாஷ்ராஜ் இருவரும் சல்மான் கானுக்கு எதிராக வில்லத்தனம் செய்ய காத்திருக்கின்றனர். இன்னொரு வில்லனாக டோலிவுட் ஹீரோ கார்திகேயா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அபிஸியல் அப்டேட்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow