“கண்ணு முன்னாடியே இப்புடி பண்றீங்களே” கறார் காவல்துறையால் கதறிய மக்கள் ஆக்கிரமிப்புகள் ஆக்கிரோஷ அகற்றம்

5 வீடுகளை ஜேசிபி மூலம் அதிகாரிகள் அகற்ற, தங்களின் கண் முன்னே வீடுகள்  இடிக்கப்படுவதை கண்டவர்கள் கண்ணீர் மல்க கதறிய காட்சி காண்பவரைக் கலங்கடித்தது. 

Apr 27, 2024 - 16:56
“கண்ணு முன்னாடியே இப்புடி பண்றீங்களே” கறார் காவல்துறையால் கதறிய மக்கள்  ஆக்கிரமிப்புகள் ஆக்கிரோஷ அகற்றம்

கேளம்பாக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் வீடுகளை, நீதிமன்ற உத்தரவின்கீழ் ஜேசிபி மூலம் அதிகாரிகள் அகற்றினர். அப்போது, அங்கிருந்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திய சம்பவம் காண்பவரைக் கலங்கடித்தது. 

சென்னையைச் சேர்ந்த கிரிதரன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சர்வே எண் 63-ல், 68 செண்ட் நிலம் தனக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை அப்புறப்படுத்த கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில், கிரிதரனுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசாரும் அரசு அதிகாரிகளும் சென்றனர். முன்னதாக பல முறை கிரிதரன் அங்கிருப்பவர்கள் வெளியேற்ற முயன்றபோது, அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்தமுறை 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஜேசிபியுடன் அங்கு சென்றனர். 

குடியிருப்பு வாசிகளின் எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமல், 5 வீடுகளை ஜேசிபி மூலம் அதிகாரிகள் அகற்ற, தங்களின் கண் முன்னே வீடுகள்  இடிக்கப்படுவதை கண்டவர்கள் கண்ணீர் மல்க கதறிய காட்சி காண்பவரைக் கலங்கடித்தது. 

அப்போது, எதிர்ப்பு தெரிவித்தவர்களை அங்கிருந்த போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர். அங்கிருந்த பெண்கள், ஆண்கள் என்ற பாரபட்சம் இன்றி அனைவரையும் ஆக்ரோஷமாக அப்புறப்படுத்தினர். 

அங்கு, பெண் ஒருவர் அதிகமாக அழுது புலம்பியதால் மூச்சு திணறல் ஏற்பட அவரை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதை அனைத்தையும் கண்கூட பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதியினர் போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow