2011-ல் தாசில்தாரை தாக்கிய வழக்கு-மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Feb 16, 2024 - 07:17
Feb 16, 2024 - 07:18
2011-ல் தாசில்தாரை தாக்கிய வழக்கு-மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 

தேர்தல் பிரசாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தாரும், தேர்தல் அதிகாரியுமான காளிமுத்து என்பவரை தாக்கியதாக கீழவளவு காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதுதொடர்பாக மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகள் என மொத்தம் 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 9ஆம் தேதி மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். இந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow