கல்வி எனும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

May 10, 2024 - 14:09
கல்வி எனும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.  
 
இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், "மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
 
மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள் எனவும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். 
 
மேலும், “மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow