விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் வெளியிடும் அப்டேட்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இந்த வாரம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி உயிரிழந்தார்.
அப்போது தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற விதி உள்ளது. ஆனால் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்தார்.
இந்நிலையில், 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், 2 கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடக்கிறது. இதனால் மக்களவை தேர்தலுடன் சேர்த்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்தவாரத்தில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?