அக்னி முடியும் முன்னே ஜோராகத் தொடங்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. ஜில் நியூஸ் சொன்ன வானிலை மையம்

அக்னி நட்சத்திர காலம் முடியும் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை வரும் 19ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

May 15, 2024 - 14:39
அக்னி முடியும் முன்னே ஜோராகத் தொடங்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. ஜில் நியூஸ் சொன்ன வானிலை மையம்

இந்தியாவில் அதிக அளவு மழைப்பொழிவு கொடுக்கக்கூடியது தென்மேற்குப் பருவமழை. ஆண்டு தோறும் ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களுக்கு தென்மேற்குப் பருவ மழை நீடிக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் பகுதிகளில் முதலில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை பிறகு கேரளாவில். பெய்யத் தொடங்கும். வழக்கமாக தெற்கு அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மே 22ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த முறை முன்கூட்டியே அதாவது மே19- ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கேரளாவிலும் ஜூன் ஒன்றாம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் ஜூலை 15ஆம் தேதிவாக்கில் பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. மழை அளவு 106 விழுக்காடாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த சில நாட்களாகவே தமிழக தென் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 
கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) தலா  8, உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும்,  ஓரிரு  இடங்களில் இயல்பை விட சற்று  குறைவாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 39.3° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35° – 39° செல்சியஸ்     பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள்,   புதுவை   மற்றும் காரைக்கால்   பகுதிகளில் 31° – 36° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 20° –27°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 36.5° செல்சியஸ் (-1.9° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் (-1.4° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின்  மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இன்றைய தினம் தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள்   மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய தினம் தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17ஆம் தேதி தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.   கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்   மற்றும்  காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

18ஆம் தேதி தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள்   மற்றும்  காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 

19ஆம் தேதி  தமிழகத்தில் அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.   தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர்,  நீலகிரி  மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள்   மற்றும்  காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 

15.05.2024 முதல் 19.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3°  செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் பொதுவாக  இயல்பு நிலை - இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை வட  தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 37°–39° செல்சியஸ், இதர   தமிழக   உள்   மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35°–37° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31°–36° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:  15.05.2024 முதல் 19.05.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 45-55% ஆகவும், மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60-85% ஆகவும்  இருக்கக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  15.05.2024 மற்றும் 16.05.2024 குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்  அதனை  ஒட்டிய  தென்தமிழக  கடலோரப்பகுதிகள்,  தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். 

மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. 28ஆம் தேதி வரைக்கும் அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இதனிடையே நடப்பாண்டு அக்னி நட்சத்திர முடியும் முன்னதாகவே தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow