Aranmanai 4 Box office Day1: இந்தாண்டின் முதல் ப்ளாக் பஸ்டர்.... அரண்மனை 4 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்!

சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 திரைப்படம் நேற்று திரையுரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

May 4, 2024 - 07:22
Aranmanai 4 Box office Day1: இந்தாண்டின் முதல் ப்ளாக் பஸ்டர்.... அரண்மனை 4 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்!

சென்னை: அரண்மனை சீரிஸில் இதுவரை 3 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், 4வது பாகத்தையும் செம்ம தில்லாக இயக்கினார் சுந்தர் சி. இந்த சீரிஸில் முதல் பாகம் மட்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வந்த 2, 3வது பாகங்கள் எதிர்பார்த்தளவு வெற்றிப் பெறவில்லை. இதனால் அரண்மனை 4ம் பாகத்துக்கு ஹைப் இல்லாமல் இருந்தது. ஆனால், இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய சுந்தர் சி, அரண்மனை 4 கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

அதேபோல், நேற்று ரிலீஸான இந்தப் படம் சொல்லி அடித்துள்ளது. இந்தாண்டு வெளியான கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம் போன்ற படங்கள் அதிக ஹைப் கொடுத்து ஏமாற்றியது. இதனால் அரண்மனை 4 படத்தின் முதல் நாள் டிக்கெட் புக்கிங் காத்து வாங்கியது. அதாவது 20 முதல் 30 சதவீதம் டிக்கெட்டுகள் மட்டுமே புக்கிங் ஆகின. ஆனால், அரண்மனை 4 FDFS கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களால், முதல் நாளின் மற்ற காட்சிகள் அனைத்தும் 90 சதவீதம் வரை ஃபுல் ஆனதாக சொல்லப்படுகிறது. 

அரண்மனை 2, 3 பாகங்களில் விட்டதை பிடிக்கணும் என தீயாக வேலைப் பார்த்துள்ள சுந்தர் சி, 4வது பாகத்தில் தனது மொத்த வித்தைகளையும் இறக்கி வைத்துள்ளார். காமெடி, ஹாரர், த்ரில்லர், சென்டிமென்ட், எமோஷனல், ஆக்‌ஷன் உள்ளிட்ட அனைத்து கமர்சியல் சம்பவங்களையும் சரியான அளவில் பதமாக சேர்த்து அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார். எனவே இந்த முறை அரண்மனை சீரிஸ் சக்சஸ் ஆனதுடன், 5ம் பாகம் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு வசூலில் மிரட்டி வருகிறது.

அதன்படி, அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்த்ததை விட தரமான கலெக்‌ஷன் தான் எனவும் சொல்லப்படுகிறது. ஏனெனில் அரண்மனை 4  FDFS ஷோவுக்குப் பின்னர் தான் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் வேகமெடுத்துள்ளது. இதனால் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் அரண்மனை 4 காட்டில் பாக்ஸ் ஆபிஸ் கோடை மழை கன்ஃபார்ம் என்றே தெரிகிறது. இந்த எதிர்பார்ப்பின்படி, அரண்மனை 4 சனிக்கிழமையான இன்று 10 முதல் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் எனக் கூறப்படுகிறது.

தங்கை தமன்னாவும் அவரது கணவர் சந்தோஷ் பிரதாப்பும் மர்மமாக உயிரிழக்கின்றனர். அவர்களது உயிரிழப்புக்கு என்ன காரணம் என தமன்னாவின் அண்ணன் சுந்தர் சி கண்டுபிடிப்பதே அரண்மனை 4 படத்தின் கதை. இதனை தனக்கே உரிய கமர்சியல் ஸ்டைலில் இயக்கியுள்ளார் சுந்தர் சி. அதேபோல், மேக்கிங், சிம்ரனின் கேமியோ டான்ஸ் பெர்ஃபாமன்ஸ்  ஆகியவையும் அரண்மனை 4 வெற்றிக்கு கை கொடுத்துள்ளன. இந்தப் படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சுந்தர் சி, 2024 இறுதியில் சங்கமித்ரா படப்பிடிப்பை தொடங்குவேன் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். பாகுபலி போல பிரம்மாண்டமான கதை பின்னணிக் கொண்ட சங்கமித்ரா, சுந்தர் சி-யின் ட்ரீம் ப்ராஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow