Nagarjuna: “தெரியாம நடந்துருச்சு...” மன்னிப்புக் கேட்ட நாகர்ஜுனா... சைலண்ட் மோடில் தனுஷ்!
ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் தெலுங்கு முன்னணி ஹீரோ நாகர்ஜுன்.
 
                                ஐதராபாத்: தனுஷின் ராயன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. ராயன் முடிந்த கையோடு சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் டோலிவுட் சீனியர் ஹீரோ நாகர்ஜுனாவும், தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், குபேரா படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தனுஷும் நாகர்ஜுனாவும் ஐதராபாத் சென்றனர். அப்போது விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக, நாகர்ஜுனாவை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வந்தனர்.
அதாவது, நாகர்ஜுனா சென்றுகொண்டிருந்த போது, அவருடன் செல்ஃபி எடுக்க முதியவர் ஒருவர் அவரை நெருங்கிச் சென்றார். அப்போது நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த முதியவரை பிடித்து தள்ளிவிட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் அப்படியொரு சம்பவம் நடந்ததே தெரியாமல் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார் நாகர்ஜுனா. அதேபோல், அவருக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த தனுஷும், அந்த முதியவர் தள்ளிவிடப்பட்டதற்கு எந்த ரியாக்ஷனும் செய்யவில்லை.
இதனையடுத்து இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள், நாகர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இச்சம்பவத்துக்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்தனர். அதேபோல், தனுஷும் இப்படி கண்டும் காணாமல் போனது குறித்து விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், விமான நிலையத்தில் முதியவர் தள்ளிவிடப்பட்ட சம்பவத்துக்கு நாகர்ஜுனா மன்னிப்புக் கேட்டு ட்வீட் செய்துள்ளார். அதில், இந்தச் சம்பவம் இப்போது தான் என் கவனத்துக்கு வந்தது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            