11 கிலோ கஞ்சா கடத்தல்... அசாம் வாலிபரை அலேக்காக தூக்கிய போலீஸ்...
அசாம் மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ கஞ்சாவை வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வாணியம்பாடி மதுவிலக்கு துறையினருக்கு, அசாம் மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜுர்லு இஸ்லாம் (20) என்பதும், அவர் அசாம் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கேரளாவிற்கு 11 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவரை கைது செய்த வாணியம்பாடி மதுவிலக்கு காவல் துறையினர், அவரிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை திருப்பத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?